திருப்பத்தூர் பகுதியில் பாசமாக கறிவிருந்து பறிமாறிய கர்ப்பிணி பெண்ணை உறவினர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன்.
இவரது மனைவி ரேவதி. மகேஷ்வரன் பெங்களூரில் வேலை செய்து வருவதால், கர்ப்பிணியாக இருந்த ரேவதி தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், ரேவதி வீட்டிற்கு அவரது உறவினர்கள் சித்ரா மற்றும் செல்வராஜ் வந்துள்ளனர். திருமண வாழ்க்கை மற்றும் கர்ப்பம் குறித்து நலம் விசாரித்துள்ளனர்.
பின்னர் உறவினர்களுக்கு கறிக்குழம்பு வைத்து விருந்து அளித்துள்ளார் ரேவதி. நன்றாக சாப்பிட்ட இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், ரேவதிக்கு போன் வந்த நிலையில், தனது வீட்டில் சரியாக சிக்னல் கிடைக்காததால் வீட்டிலிருந்து 20 அடி தூரத்திற்கு சென்று பேசியுள்ளார்.
போன்பேச சென்ற ரேவதி வீட்டிற்கு திரும்பவில்லை என்பதை உணர்ந்த உறவினர்கள் ரேவதியை தேடிச் சென்ற நிலையில், அங்கிருந்த மலையடி வாரத்தில் ரேவதி சடலமாக கிடந்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பொலிசார் ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, கடைசியாக ரேவதியின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் சித்ரா மற்றும் செல்வராஜிடம் தங்களுக்கே உரிய பாணியில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரனாக பதில் சொல்ல, பொலிசார் தங்களுக்கே உரிய பானியில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ரேவதி அணிந்திருந்த 10 சவரன் நகைக்காக கொலை செய்ததாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தனர். சிக்னல் கிடைக்கவில்லை என வெளியில் வந்த ரேவதி முகத்தில் துணியைக் கட்டி கடத்தி சென்று கொன்றுவிட்டு நகைகள் திருடியது தெரியவந்தது.
இதை அடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.