கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய தாய் மனு கொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி அன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமி திடீரென மாயமானார். மறுநாளே கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், வீட்டின் எதிரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மார்ச் 25ம் திகதி அன்று சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சம்மந்தமாக இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளைய தினம் தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சிறுமியின் தாய் கோவை மகிளா நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபரின் டி.என்.ஏ-வும் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளதால், ஒரு பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார்.