!!!ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யபோகிறார்கள்…அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்…..

சிரியாவில் 8 ஆண்டுகளாக உள்நாட்டு போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோவியத் ஒன்றிய சகாப்தத்தில் இருந்தே, ரஷ்யா சிரியாவுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.

சிரியாவின் மீதான ரஷ்யாவின் செல்வாக்கை தற்போதும் காணமுடிகிறது என்பதோடு, ஆயுதங்கள் மற்றும் பிற தளாவடங்களின் உதவியுடன் சிரியாவின் பஷர் அல்-ஆசாத் ஆட்சியை காப்பாற்றுவதாக விளாடிமிர் புதினின் அரசு வாக்குறுதி வழங்கியிருக்கிறது.

அதே சமயம், சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து, அங்குள்ள கிளர்ச்சி அமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது.

இந்நிலைியல், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டதாவது, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள்.

ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கொலை செய்கின்றன அல்லது கொலை செய்ய போகின்றன.


அதை செய்ய வேண்டாம்! இந்த படுகொலையைத் தடுக்க துருக்கி கடுமையாக உழைத்து வருகிறது என கூறியுள்ளார்.