பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை மனதில் கனவு நாயகியாக இடம்பிடித்தவர் தான். இலங்கையை சேர்ந்தா லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதலில் சிக்கி பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
பிக்பாஸ் முடிந்த பின், லாஸ்லியாவும், கவினும் சந்தித்துகொள்ளவில்லை என்று செய்திகள் உலா வந்தது. அதற்கு காரணம் ஒரு வருடம் கவினை பிரிந்திருந்தால் லாஸ்லியாவின் அப்பா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பேன் என்ற செய்தியும் இணைய ஊடகங்களில் வெளியே வந்தது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் அன்றாடம் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்கள். அதனை ஆர்மிகளும் வைரலாக்கி விடுகின்றனர். தற்போது லாஸ்லியா பிங்க் நிற உடையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதனைக்கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவிக்க, கவினின் ஆர்மிகள், லாஸ்லியாவையும், கவினும் சேர்ந்து புகைப்படம் எடுத்ததுபோல் எடிட்டிங் செய்து அதையும் வைரலாக்கி வருகின்றனர்.