தாயின் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வந்து வெறிதீர்த்த கோர கணவன்!!

தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள புழல் திருவள்ளுவர் தெரு பகுதியை சார்ந்தவர் வெற்றிவீரன் (வயது 48). பாடியில் இருக்கும் தனியார் அச்சகத்தில் பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கும் கோயம்புத்தூரை சார்ந்த சஜினி (வயது 39) என்பவருக்கும் இடையே திருமணம் முடிந்து 27 வருடங்கள் ஆகிறது.

இவர்கள் இருவருக்கும் மணிமொழி (வயது 19) மற்றும் சிந்துஜா (வயது 17) என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில்., கடந்த ஆறு வருடத்திற்கு முன்னதாக வெற்றிவீரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகிக்க துவங்கியுள்ளான். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒரு சமயத்திற்கு மேல் பொறுமையை இழந்த சஜினி தனது கணவரை பிரிந்து கோயம்புத்தூரில் இருக்கும் தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிட்ட நிலையில்., வெற்றிவீரன் தந்து மகள்களுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். மகள்கள் இருவரும் சென்னையில் இருக்கும் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில்., கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக வெற்றிவீரன் கோயம்புத்தூருக்கு சென்று இனி தவறு செய்யமாட்டேன் என்றும்., நமது மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறி குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளான். இதனை ஏற்ற சஜினி தனது கணவருடன் புறப்பட்டு வந்த நிலையில்., புழலில் தங்கியிருந்து குடும்பம் நடத்தியுள்ளனர்.

திருப்போரூரில் இருக்கும் உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்து மகள்கள் இருவரும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில்., நேற்று வழக்கம்போல தனது மனைவியிடம் மீண்டும் தகர்து செய்த நிலையில்., இவர்களுக்குள் அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடுமையான ஆத்திரத்தில் இருந்த வெற்றிவீரன் கத்தியை எருது மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளான்.

இதனால் படுகாயமடைந்த சஜினி இரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து சாயவே., சஜினியின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளான். இதனால் சஜினியின் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் வெற்றிவீரனே புழல் காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.