வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் கலைப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து யாழ்.கொக்குவில் மாணவன் சாதனை படைத்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கேங்கவரதன் நிலக்ஷன் எனும் மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
மேலும் குறித்த மாணவன் க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கலைப் பிரிவில் யாழ்.மாவட்ட ரீதியில் முதல் இடைத்தையும், அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.