சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் அரசாங்கத்தின் வைத்தியசாலைகள் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக் கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.
இதன் போது, அங்கு காணப்படும் குறைபாடுகளை இரண்டு வாரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், தான் மீண்டும் ஒரு மாதத்திற்குள் இங்கே வருவேன். அனைத்தும் சரி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அரச அதிகாரிகளுக்க கட்டளை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில். சாரதி பத்திரம் பெறவிருப்பவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும் என்று திணைக்களம் தகவல் வெளியிட்டிருந்தது.
இச்சூழ்நிலையில் மற்றுமொரு மாற்றத்தினை செய்வதற்கு அந்த திணைக்களம் முடிவு செய்திருப்பதாக போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
“சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் அரசாங்கத்தின் வைத்தியசாலைகள் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. அண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன.
வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் பொழுது பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.