குழந்தைகள் ஏன் பொய் பேசுகிறார்கள்?

குழந்தைகள் பொய் கூறுவதை தவிர்ப்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டி உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்று கூறப்படுகின்றது.

குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பிரச்சினைகளுக்கு முடிவை நோக்கி நகரவே பொய் கூறுகின்றனர்.

தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நட்பு பாராட்ட வேண்டும். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். எனவே நட்பால் அவர்கள் பொய் கூறுவதை தவிர்க்கலாம்.

குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். அது தான் முக்கிமாகிறது.

குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.