நடந்து முடிந்த கா.பொ.த உயர்தர பரீட்சையில் வணிகப் பிரிவில் பழைய பாடத்திட்டத்தில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி லக்சிகா ஜெயப்பிரசாந் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன் அவர் , தேசிய ரீதியில் 200 ஆவது (Z.Score-1.6821)இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்,
மட்டக்களப்பு கொக்குவில் பிரசதேசத்தினை சேர்ந்த குறித்த மாணவி உயர்தரத்தில் சாதனை நிலைநாட்டி பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் மாணவி லக்சிகாவுக்கும் பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.