வடக்கு கிழக்கில் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களிற்கான பேருந்து சேவை விபரம்!

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கில் ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்கள் கலந்து கொள்ளவதற்காக பேருந்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து 30 ஆம் திகதி காலை 7 மணி முதல் பேருந்து சேவை ஆரம்பமாகவுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அந்தந்த பேருந்து சேவைக்குரிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அந்தவகையில்,

கல்மடு இராமநாதபுரம் ஊடாக புதுக்காடு, வட்டக்கச்சி, கிளிநொச்சி -0778671344 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்,

நாச்சிக்குடா, ஜெயபுரம், வன்னேரி ஊடாக ஆனைவிழுந்தான் அம்பலப்பெருமாள் சந்தி, ஸ்கந்தபுரம் ஊடாக கோணாவில், ஊற்றுப்புலம் ஊடாக சேவையர் கடைச்சந்தி, டிப்போ சந்தி ஊடாக கந்தசாமி கோவில் கிளிநொச்சி -0779461328 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்,

விசுவமடு், சுண்டிக்குளம், நெத்தலியாறு, தர்மபுரம், புளியம்பொக்கனை கோவிலடி, முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி- 0770242104 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்,

துணுக்காய், ஒட்டங்குளம், பாண்டியன்குளம், பாலியாறு, ஒட்டறுத்தகுளம், வன்னிவிளாங்குளாம், ஊடாக மாங்குளம், கிளிநொச்சி – 0770201854 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்,

கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் ஊடாக முள்ளியவளை, தண்ணிரூற்று, சிலாவத்தை, முல்லைத்தீவு ஊடாக செல்வபுரம், வட்டுவாகல் முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, கைவேலி, வள்ளிபுனம், சுதந்திரபுரம், விசுவமடு, பரந்தன், கிளிநொச்சி – 0770287062 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்,

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி 77 866 8602 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பேருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.