அமெரிக்கவை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணரின் ஐந்து வயது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது தொடர்பிலான மனதை உருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Criss Angel என்பவர் பிரபல மேஜிக் நிபுணராக உள்ளார். Criss Angel – Shaunyl Benson தம்பதிக்கு ஜானி என்ற 5 வயது மகன் உள்ளான்.
ஜானி 21 மாத குழந்தையாக இருந்த போது அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இதையடுத்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
பின்னர் ஜானிக்கு புற்றுநோய்க்கான chemotherapy செய்யப்பட்டது.
இந்நிலையில் அவனுக்கு நோய் குணமானதாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது.
ஆனால் மீண்டும் ஜானியை புற்றுநோய் தாக்கியுள்ளது. இதனால் அவன் பெற்றோர் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஜானி சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை Criss Angel வெளியிட்டுள்ளார்.
அதில் மகன் அருகில் படுத்துக்கொண்டு அவனுக்கு கண்ணீருடன் முத்தம் கொடுக்கும் புகைப்படம் நெஞ்சை உருக்கும் விதத்தில் உள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே என் மகனின் புகைப்படங்களை வெளியிட்டேன்.
ஜானி மிகவும் தைரியமானவன், அவனுக்கு தன்னம்பிக்கை அதிகம் என கூறினார்.
ஜானியின் தாய் Shaunyl Benson கூறுகையில், அடுத்த வருடம் ஜானியை சேர்க்க பள்ளியை தேடுவதற்கு பதிலாக, அவனுக்கு சிகிச்சையளிக்க வேறு மருத்துவமனையை தேடி வருகிறோம்.
பல குழந்தைகளும் இது போல புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிகிச்சைக்கு பணம் சேர்க்கவும் நான் முயன்று வருகிறேன்,
ஜானிக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.