பிரபல நடிகர் சிவக்குமாரை அவமானப்படுத்திய முக்கிய நடிகை!

நடிகர் சிவக்குமாரை இப்போதிருக்கும் தலைமுறைகள் சமூகவலைதளங்கள் மூலம் அறிந்து வைத்திருக்கிறார்கள். நடிகராக பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

தற்போது அவர் சொற்பொழிவு, ஆன்மீகம், ஓவியம் என நேரத்தை பயனுள்ளதாக்கி வருகிறார். அண்மையில் முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 60 ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தான் முக்தா சீனிவாசன் அவர்கள் 1957- ல் முதலாளி என்ற படம் எடுத்தார். அதில் வந்த ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’, பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில் நடிகையா அறிமுகமானார் . அந்தப் படத்தை நான் எட்டாவது படிக்கும்போது ஒரு பள்ளிச் சிறுவனாக இருந்து பார்த்தவன்.

அதன் பிறகு 12 வது முடித்து ஓவியக் கல்லூரி முடித்து சினிமாவுக்கு வந்தபோது அதே தேவிகா எனக்கு ஜோடியாக நடித்தார். “இந்தப் பையனா ஹீரோ? “என்று என்னை இளக்காரமாக அவர் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது என கூறினார்.