பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் காதல் விவகாரங்கள் தான் அதிகம் பேசப்படும். தமிழில் இதுவரை நடந்த மூன்று சீசன்களிலும் அப்படித்தான்.
ஹிந்தியில் தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 13வது சீசன் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சல்மான் கான் தொகுத்து வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆண்களும் பெண்களும் படுக்கையை பகிர்ந்துகொள்வது பற்றி பலரும் கடும் விமர்சனங்களை வைத்தனர்.
இந்நிலையில் தற்போது Vishal Aditya Singh மற்றும் Madhurima Tuli என்ற இரண்டு போட்டியாளர்கள் கேமரா இருப்பதையும் கண்டுகொள்ளாமல் போர்வைக்குள் முத்தம் கொடுத்துக்கொண்டு வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைப்போட்டு பிரிந்த அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபிறகு மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.