பிரபல தமிழ் நடிகர் ராஜ்கிரணுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் நடிகர் ராஜ்கிரணும் ஒருவர். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர் காதர் மொய்தீன். பின்னர் சினிமாவிற்காகராஜ்கிரண் என தனது பெயரை இவர் மாற்றிக்கொண்டார்.தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒருகோடி ரூபாய் சம்பளம் வாங்கியதும் நடிகர் ராஜ்கிரண் தான் என்பது பலரும் அறியாத செய்தி ஆகும்.
இவர் பிரபல நடிகர் எனபதையும் தாண்டி இவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என மூன்று குதிரையிலும் இவர் அதிரடியாக சவாரி செய்தவர் ராஜ்கிரண்.இவரது திருமண வாழ்க்கையை பொறுத்தவரை, துவக்கத்தில் செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்த இவர், குறுகிய காலத்திலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்துவிட்டார். அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்த பின்னர் தனது 50 வயதில் பத்மஜோதி என்னும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் ராஜ்கிரண்.இப்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரின் குடும்ப புகைப்படம் பரவி வருகிறது.