பாலிவுட்டின் பாட்ஷா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ஷாருக் கான். இவர் ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருப்பவர்.
இவர் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். மேலும், ஷாரூக்கானை வைத்து அட்லீ இயக்க இருக்கும் படத்தில் மாற்றங்கள் செய்ய ஷாரூக் கான் சொல்லியிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அட்லீயின் கதையை கேட்ட ஷாரூக்கான் கதையில் தனக்கேற்றபடி சிறு மாற்றங்கள் செய்யுமாறு கூறியிருக்கிறாராம்.
இதன் காரணமாக, அட்லீ கதையை இந்தி ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் மாற்றுவதற்காகவே ஒரு தனி குழுவை நியமித்து பணியாற்றி வருவதாக சினி வட்டாரத்தில் செய்தி வந்தது. இந்த படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் சீசன்களில் சிறுபிள்ளையாக இருந்த ஷாருக்கானின் மகள் சுகானா தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார். அதுமட்டுமின்றி கவர்ச்சியில் கட்டுக்கடங்காத அளவு தாராளம் காட்டி ரசிகர்களை அவர் பக்கம் இழுத்திருக்கிறார். மேலும் நடிப்பதற்கு முன்னாடியே இப்படியா அப்போ நடிக்க வந்த அவ்வளவு தான் என்று ரசிகர்கள் அவரது புகைப்படத்தை பார்த்து வழிந்து வருகிறார்கள்.