தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.
சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.
இந்நிலையில் யாஷிகா நடிகர் அஜித்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அஜித் ட்விட்டரில் சேர வேண்டும் என அஜித்துக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தன்னைப்போல் அஜித் சார் ட்விட்டரில் இணைய வேண்டுமென யாரெல்லாம் ஆசைப்படுகிறீர்கள் என ரசிகர்களிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார். அதற்கு தற்போதுவரை 3000 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
I so badly want #thalaajith sir to join Twitter ? anybody else feels the same ? ??
— Yashika Aannand (@iamyashikaanand) December 29, 2019