நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்ப பிடிப்புகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்டிரியா, கைதி படத்தின் வில்லன் காளிதாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கத்தி படத்தை தொடர்ந்து இராண்டாவது முறையாக விஜயின் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், கர்நாடக மாநிலம் ஹிமோகாவிலும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி தயாரிப்பாளர் டுவிட்டர் பக்கத்தில் இருந்து தளபதி 64 படத்திற்கான ப்ர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டிசம்பர் 31 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #Thalapathy64FLday, Thalapathy 64 போன்ற ஹேஷ்டக்குளை ட்ரெண்ட் செய்து தங்கள் எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். அதன் படி தளபதி 64 படத்தின் ப்ர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகிருக்கிறது.
படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு ஏற்கனவே விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்ற தகவலை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக தெரிகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 3டி வடிவில் உள்ளது. விஜய் மேஜை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு, கைக்காப்பு ஒன்றினை சுழற்றிவிடுவது போல் உள்ளது. ஒரு கையினை தன்னுடைய தலைமுடியை கோதி கொண்டிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் படம் என்பதால், மாநகரம், கைதி படங்களைப் போன்று மாஸ்டரும் ஒரு இண்டென்ஸ் ஆக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் விஜயின் லுக் உள்ளது. போஸ்டரை பொறுத்தவரை விஜய் ஒரு விசாரணைக் கைதியாக இருக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது.
தலைப்பினை பொறுத்தவரை விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.