எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

எஸ்.ஜே.சூர்யா மான்ஸ்டர் திரைப்படத்துக்கு பின்னர் பொம்மை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய படங்களை இயக்கிய ராதா போகன் இயக்குகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் மான்ஸ்டர் படத்துக்கு பின்னர் எஸ்.ஜே. சூர்யாவோடு மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.