சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழியை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் Most Popular Person on Television விருது பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்ற லொஸ்லியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதையும் பதக்கத்தையும் நடிகை ரேகா அவருக்கு வழங்கினார்.
தனக்கு ஆண் நண்பராக என்ன தகுதிகள் வேண்டும் என்ற கேள்விக்கு லொஸ்லியா உண்மையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடார்ந்து, லொஸ்லியா மேடையில் டார்லிங் டம்பக்கு பாடலுக்கு சாண்டியுடன் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. இவர்களுடன் ரேகாவும் இணைந்து நடனம் ஆடினார்.