நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார்.
இந்த திரைப்படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவருடைய மகளான ஆதியா ஷெட்டியை பிரபல கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல் காதலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
குறித்த தகவல் அண்மைக்காலமாக தெரிவிக்கப்படும் நிலையில் இருவரும் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில், கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதியா ஷெட்டியுடன் இருக்கும் ஒளிப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.