சீரியல்களில் ஏற்பட்ட பிரச்சனை- நடிகை எடுத்த அதிரடி முடிவு!

நாதஸ்வரம், வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், ராஜா ராணி என பல சீரியல்களில் நடித்தவர் கீதாஞ்சலி.

இவர் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதால் நாதஸ்வரம் சீரியலில் தனது வீட்டில் இருந்தே நடித்து வந்தார். பின் அந்த சீரியல் முடிய தனது அம்மாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.

இங்கு சீரியல்கள் நடித்துவந்த அவர் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல் வாய்ப்பு வர நடித்து வந்தார். ஆனால் சில சிக்கல்கள் ஏற்பட சீரியலே வேண்டாம் என்று தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டார்.

தற்போது அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் மார்கழி முடிந்ததும் திருமண பேச்சு வார்த்தை தொடங்கும் என கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.