தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது. கடல் கடந்து பல இடங்களில் மார்க்கெட் இருந்து வருகின்றது.
அந்த வகையில் ரஷ்யாவிலும் தற்போது சமீப காலமாக தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றதாம், இதில் இந்த வருடம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் அங்கு ரிலிஸாகியுள்ளது.
இதில் ரஷ்யாவில் படம் எடுத்து வெளியிட்ட விநியோகஸ்தரே தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் விஸ்வாசம் முதலிடத்திலும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிகில், பேட்ட உள்ளதாக கூறியுள்ளார்.
அதோடு இந்த வருடம் பல படங்களை அங்கு ரிலிஸ் செய்யும் முயற்சியிலும் உள்ளாத கூறப்படுகின்றது.