#MeToo புகாருக்கு பிறகு எனக்கு இதெல்லாம் நடந்தது.. வேதனையுடன் இளம் நடிகை!

2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஷாலு ஷம்மு அளித்த பேட்டியில், “முன்பு இருந்ததைவிட சினிமாத்துறை தற்போது பெண்களுக்கு போட்டி, ஆரோக்கியம் நிறைந்ததாக மாறிவிட்டடது. ‘#MeToo புகார் கூறிய பிறகு தனக்கு நிறைய பட வாய்ப்பு மறுக்கப்பட்டது. என்னை சர்ச்சை நாயகியாக பார்க்காதீர்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.