தற்போதுள்ள காலங்களில் பெரும் நகர்களில் திருட்டு என்பது பல விதமாக நடந்து வருகிறது. இரவு நேரங்களில் திருடும் கொள்ளையர்கள் உள்ளாடையுடன் வந்து திருடுவது., சிறிய அளவிலான பொருட்களை திருடுவது என்று பலவிதமான திருட்டுகள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில்., பெண்களின் ஆடையை திருடி செல்லும் மர்ம நபரின் காரணமாக மக்கள் கடுமையான அச்சத்தில் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சென்னையில் உள்ள கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் தனியார் குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பின் உள்ளே நுழைந்த மர்ம நபரொருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்து ஆடைகளை திருடி சென்றுள்ளான். மேலும்., அங்கிருக்கும் பெண்களின் ஆடைகளை மட்டும் திருடியுள்ளான்.
காலையில் எழுந்த போது ஜன்னல் திறந்த நிலையில் இருப்பதையும்., ஆடைகள் காணாமல் போயுள்ளதையும் அறிந்து சந்தேகமடைந்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது அதிகாலை 3.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த மர்ம நபரால் பெண்களின் ஆடை திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.