ஏமன் நாட்டில் அரங்கேறிய கொடூர தாக்குதல்!

ஏமன் நாட்டில் அரசு படையினருக்கும் – ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போரானது நடைபெற்று வருகிறது. மேலும்., அரசுக்கு ஆதரவாக சவூதி கூட்டமைப்பு நாடுகளை சார்ந்த படைகள் காலத்தில் இருந்து வருகிறது.

சவூதி அரேபிய நாட்டினை சார்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த இராணுவ வீரர்கள் ஏமன் நாட்டில் முகாமிட்டு வரும் நிலையில்., ஏமன் நாட்டில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரக படையில் புதியதாக இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவானது அங்குள்ள தாலே மகனத்தில் இருக்கும் அல் டாலி நகரில் அமைத்துள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இவ்விழாவின் நிறைவாக இராணுவ அணிவகுப்பும் நடைபெற்றது.

இந்த சமயத்தில்., யாரும் எதிர்பாராத நேரத்தில் விழா நடைபெற்று வந்த மைதானத்திற்குள் ஏவுகணை விழுந்து வெடித்ததில் சுமார் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும்., 9 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு அலறி துடித்தனர்.

தற்போது அரங்கேறிய தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில்., இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று ஏமன் அரசும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும்., கடந்த ஆகஸ்ட் மாதத்தின் போது நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அரங்கேறிய தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.