சமீப காலமாக சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பல பிரபலங்கள் வியாதியினால் அவதிப்பட்டு கடைசியில் பணக்கஷ்டத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்கு வந்துள்ளனர்.
நடிகைகள் சம்பாதிக்கும் காலத்தில் ஆடரம்பரமாக செலவு செய்துவிட்டு பின்னர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது.
தற்போது இளம்நடிகை ஒருவர் யாருடைய ஆதரவும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இளம் நடிகையான ஷர்மிளா, வறுமைக் காரணமாக கேட்க ஆளில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஷர்மிலா, தமிழில் நல்லதொரு குடும்பம் , உன்னை கண் தேடுதே, உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடிகை சுரபிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
ஏற்கெனவே திருமணமான அவர் முதல் கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்த அவர், கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
பட வாய்ப்புகள் இல்லாததால் குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் அவதிப்பட்ட இவருக்கு, நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால் உதவி செய்திருக்கிறார்.
இந்நிலையில் ஆர்த்தோ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஷர்மிலா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் தங்குவதற்கு கூறியுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அனுமதித்த பின்பு அவரைப் பார்ப்பதற்கு யாரும் வராத நிலையில், அவருக்கு அருகே இருந்தவர்கள், நடிகை என்பதை அடையாளம் கண்டு உதவிசெய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.