தற்போது இந்திய நாட்டில் அதிகமாக பேசப்பட்டு விடயம் என்னவென்றால், அது நித்தியானந்தா பற்றிய பேச்சாகவே இருந்து வருகின்றது.
தனக்காக தனிநாடு கேட்டு, அங்கேயே செட்டில் ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கும் நித்தியானந்தாவிற்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று அதிகமான புகார்கள் காவல்நிலையத்தில் இருந்து வருகின்றது.
விசாரணை நடந்துவரும் நிலையில் சமீபத்தில் ஆசிரமத்தில் இருந்த சங்கீதா என்ற பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர்கள், சங்கீதாவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தவிட்டதையடுத்து, அவரது தலையில் மூளைக்கு பதிலாக பேப்பர் வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் வெளிவந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஈரோடு நாச்சியப்பா வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி, லட்சுமி அம்மாளின் என்ற தம்பதிகளின் ஒரே மகனான முருகானந்தம் என்பவர் தற்போது நித்யானந்தா ஆசிரம்த்திலிருந்து மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஒரே மகனை கஷ்டப்பட்டு பல் மருத்துவருக்கு படிக்க வைத்துள்ளனர் இந்த தம்பதி. பின்பு மேல் படிப்பிற்கு பெங்களூர் வந்த தருணத்தில் நித்யானந்தாவின் சொற்பொழிவைக் கேட்டு, தனது பெயரை பிராணாசாமி என்று மாற்றிக்கொண்டு அவரது பிடரியிலேயே தங்கியுள்ளார்.
பின்பு 3 வருட போராட்டத்திற்கு பின்பு மகனை வீட்டிற்கு அழைத்து வந்தும் பலனில்லாமல் ஒரு வருடத்தில் மீண்டும் ஆசிரம்த்திற்கே சென்றுள்ளார். பின்பு கடந்த 2017ம் ஆண்டு முருகானந்தத்தில் தந்தை பழனிச்சாமி இறந்துவிட்டதால் அன்று ஒருநாள் மட்டும் செய்ய வேண்டிய சடங்கை செய்துவிட்டு மீண்டும் சென்றுவிட்டாராம்.
தனது பார்க்க வேண்டும் என்று தோன்றும் பொழுது அவரது தாய், பெங்களூர் சென்று பார்த்து வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக முருகானந்தம் ஆசிரமத்தில் இல்லை என்று லட்சுமி அம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்களாம்.
இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள் தற்போது மகனைக் காணவில்லை சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்னும் 4 வாரத்தில் முருகானந்தத்தை தேடிக் கண்டுபிடிக்க நீதிபதிகள் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பு தேனி மருத்துவர் ஒருவரும் மாயமாகியுள்ளதையடுத்து, தற்போது ஈரோடு பல் மருத்துவரும் காணாமல் சென்றுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.