வவுனியா கல்குண்டாமடுவில் இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (1) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்து விபத்து நேர்ந்தது.
வாகனத்தில் பயணித்தவர்கள் ஒருவாறு வெளியேறி, கரைசேர்ந்து விட்டனர். வாகனத்தில் பயணித்த நால்வரும் சிறு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.