மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் எத்தனோல் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருப்பதாக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் நாட்டில் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதியை உடனடியாக இடை நிறுத்தவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைவாக இன்று தொடக்கம் ஜனவரி (01) மதுபானம் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் எத்தனோல் இறக்குமதி இடை நிறுத்தப்படுகின்றது. தேசிய ரீதியில் எத்தனோலினால் பெருமளவில் தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.