‘மாஸ்டர்’ படம் குறித்து முக்கிய தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், விஜய் டிவி புகழ் தீனா, விஜே ரம்யா, ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் கைதி படத்துக்காக சிறந்த கதை மற்றும் திரைக்கதைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கினார்.

அப்போது பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”விஜய் சார் ‘கைதி’ படம் பார்த்துட்டு கட்டிபிடிச்சு பாராட்டுனாரு. அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. தளபதி 64 படம் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நீங்கள் எதிர்பார்க்குற அளவுக்கு திருப்தியோட தளபதி 64 படம் இருக்கும்” என்று தெரிவித்தார்.