ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் புது போஸ்டரை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த படம் 2021ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.