ஹரிஷ் கல்யாணுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபலம்

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் கடந்த டிசம்பர் 6ஆம் திகதி வெளியாகியிருந்தது. இதனையடுத்து ஹரிஷ் கல்யாண், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.

கிருஷ்ணன் வசந்த் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா தெரிவித்ததாவது, ”உணவு, காதல், பொழுதுபோக்கு என கலவையாக இந்த படம் உருவாகி வருகிறது. பிரியா பவானி ஷங்கர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். நான் தயாரிப்பாளராக பணிபுரிந்த வரை பிரியா, தனது பணிகளை கச்சிதமாக செய்யக்கூடியவர். மேலும் தன் பணிகளை மேம்படுத்திக்கொண்டே இருப்பார்” என தெரிவித்தார்.