தமிழகத்தின் சென்னையை அடுத்துள்ள ஆவடி பகுதியை சார்ந்த மெக்கானிக் ராஜேந்திரன். இவர் கடந்த 29 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து திருத்தணிக்கு செல்லும் மின்சார இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த போது., ஆறுகோணம் அருகே தவறி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இரயில்வே காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தான் தவறுதலாக விழவில்லை என்றும்., கைக்குட்டையில் முகத்தினை மறைத்து தன்னை 3 பேர் கொண்ட கும்பல் இரயிலில் இருந்து கீழே தள்ளியதும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக தனது மனைவியின் மீது சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இராஜேந்திரனின் மனைவியான அஸ்வினியை பிடித்து விசாரித்த சமயத்தில் பேரும் அதிர்ச்சி தகவல வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் அஸ்வினிக்கும் – இராஜேந்திரனுக்கும் திருமணம் முடிந்து வசித்து வந்த நிலையில்., பக்கத்து தெருவை சார்ந்த அனுராக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விஷயம் இராஜேந்திரனுக்கு தெரியவரவே இவர்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனது கள்ளகாதலுடன் கொண்ட உறவை துண்டிக்காமல் மணிக்கணக்கில் அலைபேசியில் பேசி வந்துள்ளார்.
தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு பின்னர் இராஜேந்திரனை கொலை செய்ய தனது காதலனிடம் தெரிவித்துள்ளதை அடுத்து., கொலைவழக்குக்காக பயந்துபோன கள்ளகாதல் ஜோடி பலே திட்டத்துடன் களமிறங்கியது. மேலும்., மனைவி திருந்தி வாழ வேண்டும் என்று எண்ணி திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதாக அஸ்வினியிடம் கூறியுள்ளார்.
இந்த சமயத்தை தனக்கு சாதகமாக உபயோகம் செய்து கொள்ள நினைத்த கள்ளக்காதல் ஜோடி திட்டமிட்டு இரயிலில் சென்ற நிலையில்., ஓசி குடிக்கு அலையும் இரண்டு பேரை கள்ளகாதலன் அனுராக் உதவிக்கு அழைத்து சென்று இரயிலில் இருந்து தள்ளிவிட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அஸ்வினி., அனுராக் மற்றும் அவனது கூட்டாளிகள் காமலேஸ்வரன்., தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும்., கள்ளக்காதல் ஜோடிக்கு உதவி செய்த நபர்கள் இராஜேந்திரனை இரயிலில் இருந்து தள்ளி விடும் போது இரயில் வேகம் குறைந்ததன் காரணமாக காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது.