கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுமுறைகள்.!!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் தனக்கு பிடித்த உணவுகளுடன் சத்தான உணவுகளும் உண்டு வந்தால் குழந்தையின் நலனும் அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் உடலுக்கு நல்ல மற்றும் சத்தான ஆரோக்கியம் தரும் உணவுகளை பெண்கள் சாப்பிட வேண்டும்.

மேலும்., சாதாரண நாட்களில் சாப்பிடும் கலோரிகளை விட கர்ப்ப காலத்தில் அதிகளவு கலோரிகள் தேவைப்படும் என்பதால் அதற்கேற்றவாறு சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதில் ஆறு வேலையாக சாப்பிட வேண்டும்.

இந்த நேரங்களில் சைவ உணவுகளை பொறுத்த வரையில் தானியங்கள்., பருப்புகள்., பயிறு வகைகள்., காய்கறிகள்., பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை காட்டாயம் சாப்பிட வேண்டும்.

மேலும்., முந்திரி., உலர் திராட்சை., வேர் கடலை., நெல்லிக்காய்., அத்திப்பழம்., பால்., தயிர்., வெண்ணை., நெய்., மோர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பொருட்களையும் எடுத்து கொள்ள வேண்டும்.

இதனைப்போன்று அசைவ உணவுகளை பொறுத்த வரையில் முட்டை., மீன்., ஆடு., கோழி இறைச்சி மற்றும் ஆட்டு ஈரல் போன்றவற்றை சாப்பிட வேண்டும். கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

இரும்பு சத்துக்களை பொறுத்த வரையில் முருங்கைக்கீரை., பேரிச்சம் பழம்., தர்பூசணி., உலர்ந்த திராட்சை., காய்ந்த சுண்டைக்காய்., வெள்ளம்., பனங்கற்கண்டு., பாதம் மற்றும் ஆட்டு ஈரல் போன்றவற்றை சாப்பிடலாம்.

மேலும்., கர்ப்பமாக இருக்கும் காலங்களில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டியது என்பது அவசியமானதாகும். போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பதன் காரணமாக மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் தொற்று போன்ற தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.