திரையுலகின் நாயகி, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, மாஸ் ஹீரோக்களுக்கு சமமாக அதிக ரசிகர்களை கொண்டவர். இவர் தனது, அழகாலும், திறமையாலும் இன்றைய வரைக்கும் அவரது இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறார்.
இவர் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பின்னர், தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி படங்களில் நடித்து பல வெற்றிப் படங்களை தந்தவர்.
மேலும், அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ், மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து, இவர் விக்னேஷ் சிவனை காதலித்து அவரது, சொந்த வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது நயன் மிகுந்த உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார்.ஜொலிக்கும் வண்ண உடையில் கிளாமராக பீச்சில் நின்று போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.