கவர்ச்சியில் காஜலுக்கு டஃப் கொடுக்கும் காஜல் தங்கை.!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்காக, மர்ம கலைகளை கற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், விடுமுறை நாட்களில் தனது தங்கை மற்றும் அவரின் குழந்தையுடன் பொழுதைக் கழித்து வருகிறார். காஜலின் தங்கை நிஷா அகர்வால், இஷ்டம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின்பு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நிஷா அகர்வால் பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், காஜலுக்கு டஃப் கொடுக்குறீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.