பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் நடிகை..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தேன்மொழி. இது மிகவும் பிரபலமான சீரியலாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்கிய ஜாக்குலின் தான் கதாநாயகி.

இந்த சீரியலில் ஜாக்குலினுக்கு  தங்கையாக நடிப்பவர் அஞ்சலி. இவருக்கு பதிலாக இப்போது வேறொருவர் அவரது கேரக்டரில் நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும், இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில், தேன்மொழி சீரியலில் எனது கதாபாத்திரம் லவ் டிராக்கில் செல்ல இருந்தது, ஆனால் அதற்கு என் முகம் மெச்சூரிட்யாக இல்லை என்று கூறினார்கள், அதனால் நானும் அதிலிருந்து விலகிவிட்டேன்.

அதன்பிறகு, நான் காதலித்தவரை திருமணம் செய்துகொண்டேன். ஆனால், என் வீட்டில் காதலுக்கு அனுமதி இல்லை எனவே பிரபாவின் அம்மா-அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என தெரிவித்திருக்கிறார்.