சமகாலத்தில் கிளவுட் சேமிப்பு வசதி எனப்படும் ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கும் பழக்கம் உலகளவில் வெகுவாக அதிகரித்துவருகின்றது.
இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையினை முன்வந்து வழங்கி வருகின்றன.
இவற்றில் இலவசம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட சேவைகள் என்பன அடங்கும்.
எவ்வாறெனினும் இலவசமான முறையில் குறைந்தளவு சேமிப்பு வசதியே இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் Cubbit எனும் கிளவுட் சேவையை வழங்கும் நிறுவனம் 4TB சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது.
இவ் இலவச சேவையில் தரவுகளைப் பாதுகாப்பதற்காக AES-256 வகை என்கிரிப்ட்ஷனும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.