இந்தோனேசியா நாட்டில் பருவமழையானது கடுமையாக தீவிரமடைந்துள்ளது. இதனால் பரவலான கனமழை பேசிட்டு வரும் நிலையில்., தாழ்வான பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் தத்தளிக்க துவங்கியுள்ளது.
அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு., நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நாட்டில் உள்ள ஜாகர்தா பிராந்தியத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை 23 பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும்., மேலும் பலரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருப்பதாக பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. ஜகார்தா பிராந்தியத்தில் ஏராளாமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில்., சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ளனர்.
மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில்., மின்விபத்துக்களை தவிர்ப்பதற்காக மின்னிணைப்புகள் துண்டுகப்ட்டுள்ளதாகவும்., தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளதால் இரயில் பாதைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும்., கடந்த 2013 ஆம் வருடத்திற்கு பின்னர் தற்போதுதான் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.