சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கிற நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சித்ரா.
இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் புத்தாண்டு அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை “சித்ராவிற்கு, இரு ரசிகர்கள் சித்தரவின் முகத்தை தங்களது கையால் வரைந்து அவருக்கு பரிசளித்துள்ளனர். இந்த பரிசை பார்த்தவுடன் சித்ரா தனது ரசிகர்களுக்கு இந்த அன்பிற்கு மிக்க நன்றி” என கூறினார்.
மேலும், இந்த வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘2020- தில் எனக்கு கிடைத்த முதல் பரிசு’ என்று பதிவிட்டுள்ளார் நடிகை சித்ரா.