முன்னணி இணைய உலாவிகளன UC Browser அட்டகாசமான வசதியுடன் புதிய பதிப்பாக வெளிவருகிறது

முன்னணி இணைய உலாவிகளுள் UC Browser உலாவியும் ஒன்றாகும்.

இது அலிபாபா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இவ் உலாவியின் புதிய பதிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் மொபைல் டேட்டா அதிகம் விரயமாவதை தடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 80 சதவீதம் வரை மொபைல் டேட்டாவினை சேமிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் 200 சதவீத வேகத்தில் செயற்படக்கூடிய வகையிலும் இப் புதிய அப்டேட் காணப்படுகின்றது.

UC Browser 12.14.0.1221 எனும் குறித்த புதிய பதிப்பில் 15 இந்திய மொழிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.