உடவளவ தேசிய பூங்கா அருகே சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31ம் திகதி ஆண் சிறுத்தை ஒன்று உடவளவ தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள மவு அரா நீர்த்தேக்கத்திற்கு அருகில், சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது.
சிறுத்தையின் பற்கள் பிடுங்கப்பட்டு, முன் பாதங்கள் வெட்டப்பட்டு மிகவும் கோரமாக கொலை செய்யப்பட்டிருந்தது.
சுமார் 10 வயதான குறித்த சிறுத்தை வேட்டைக்காக, பூங்காவை விட்டு வெளியே வந்தபோது கொல்லப்பட்டிருக்கலாமென்றும் கருதப்படுகிற நிலையில் பிரேத பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
உடவளவ பூங்காவில் சுமார் 10 சிறுத்தைகள் மட்டுமே வாழ்கின்ற நிலையில் அதிலொரு சிறுத்தையே கொல்லப்பட்டிருக்கலாமென்றும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கிறது.
இதேவேளை சிவப்பு பட்டியலில் இலங்கையின் சிறுத்தைகள் “ஆபத்தான” நிலையிலிருப்பதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்ததுடன் , சிவப்பு பட்டியலில் இலங்கையையும் இணைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது