விருது விழாவில் பட்டுப்புடவையில் ஜொலித்த நயன்தாரா…

பிரபல விருது விழாவில் நடிகை நயன்தாரா அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக பங்கேற்றுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியின் சினி அவார்ட்ஸ் விருது விழா சென்னையில் நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது. பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர்கள் கமல், தனுஷ், யோகி பாபு என நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். இதேபோல் நடிகை நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், சமந்தா உட்பட ஏராளமான நடிகைகளும் இந்த விருது விழாவில் பங்கேற்றனர்.

இதில் நடிகை நயன்தாராவிற்கு 2019ம் ஆண்டின் சிறப்பு நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் நடித்து மட்டும் கொடுத்தவிட்டு ஒதுங்கி விடுகின்றார். தான் நடித்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு செல்லாத நயன்தாரா விருது விழாவில் மட்டும் அசத்தலாய் பங்கேற்றுள்ளார்.

விஜய், அஜித், ரஜினி என முன்னணி பிரபலங்களுடன் நடித்தாலும் நயன்தாரா ப்ரொமோஷனுக்கு செல்வதில்லை. இந்நிலையில் விருதுவிழாவில் கலந்து கொண்ட நயன்தாராவை சிலர் பாராட்டினாலும், பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

படம் ஆடியோ லாஞ்சுக்கு போக மாட்டீங்க ஆனா விருது கொடுக்குறாங்க என்றதும் பல்லை இளிச்சுட்டு போயிருப்பீங்க என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.