மலையாள நடிகர் ஜெயராம் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். காமெடி கலந்த அவரது நடிப்பு பலருக்கும் பிடிக்கும். இவர் அடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
மேலும் தற்போது ஜெயராம் Namo என்ற சமஸ்கிருத படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்து, தலைமுடி இல்லாமல் புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
அந்த புகைப்படம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த படத்தில் அவர் குசேலன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.