தர்பார் படத்தில் அனிருத் மோசடி செய்துவிட்டார்…

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.

வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் மீது புகார் அளித்துள்ளார் தமிழக இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா.

இதுகுறித்து கூறியுள்ள அவர்,

தர்பார் படத்தின் இசை பணியில் தமிழக இசை கலைஞர்களை பயன்படுத்தி கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்த இசை அமைப்பாளர் அனிருத். பின்னர் ஹாலிவுட் இசை கலைஞர்களை பயன்படுத்தி கொண்டார்.

இதனால் அனிரூத் தமிழக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என கூறிய வாக்குறுதியை மீறி விட்டதாக தீனா தெரிவித்துள்ளார்.