முன்னாள் அதிபர் விடுத்த முக்கிய அறிவிப்பு….!!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும், தங்களுடைய விருப்பங்களை தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இந்நிலையில் இதற்கு சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கடும் அதிருப்தியடைந்திருக்கும் மைத்திரிபால சிறிசேன, முக்கிய தீர்மானங்களை எட்டுவதற்காக, சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பதவி நிலையில் இருப்பவர்களை கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடபோவதாக ஏற்கனவே அறிவித்திருக்கும் மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் சின்னத்திலேயே களமிறங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.