விஜய்க்கு இப்படியும் ஒரு ரசிகரா??

நடிகர் விஜய்க்கு தென்னிந்தியாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது படங்களை தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள் ஒருபுறம். அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுபவர்கள் மறுபுறம் என விஜய்க்கு அன்பான ரசிகர்கள் எண்ணிக்கையில்லாமல் இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பார்வையற்ற நபர் ஒருவர் தான் விஜய்யை சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் விஜய் மீது அவர் வைத்திருக்கும் அன்பு பற்றி பேசிய அவர் “நீங்கள் உயிரோடு இருக்கும்போதே நாங்கள் இறந்துவிடவேண்டும்” என கூறியது பலருக்கும் கண்ணீரை வரவைத்துள்ளது.