இராணுவ தளபதி இறந்த பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் பவுண்டி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உயர் இராணுவ தளபதியான குவாசிம் சுலைமானி, கடந்த வெள்ளி அன்று அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதை அடுத்து இருநாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சுலைமானியின் இறுதிச்சடங்கின் போது ஒரு அமைப்பாளர், நாட்டின் ஒவ்வொரு ஈரானியரும் ஒரு அமெரிக்க டாலர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அமெரிக்க அதிபரை கொல்பவர் யாராக இருந்தாலும் பணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஈரானில் 80 மில்லியன் மக்கள் உள்ளனர். ஈரானிய மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு, 80 மில்லியன் டாலர் (61 மில்லியன் டாலர்) திரட்ட விரும்புகிறோம்.
இது அதிபர் டிரம்பின் தலையுடன் வருபவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியாகும், என்று அறிவித்துள்ளார். மஷாத்தில் ஊர்வலத்தின் போது அமைப்பாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.