தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பலவேறு மொழிகளில் சிறந்த நடிகையாக இருந்தவர் தான் நடிகை ப்ரியாமணி.
இவர் திருமணத்திற்கு பிறகு திரையுலகில் பெரிதாக படங்களை எதுவும் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் சாருலதா படத்திற்கு பிறகு பட வாய்ப்பும் இவருக்கு அமையவில்லை.
ஆனால் தற்போது ஏ.எல் விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடித்து வருகிறார் ப்ரியாமணி என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது சென்ற வருடம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய போகிறார்கள். இதில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தை ப்ரியாமணி நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இதற்கு முன்பாகவே இவர் தனுஷின் கொடி படத்தை ரீமேக் செய்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது ப்ரியாமணிக்கு மிக பெரிய ரீஎண்ட்ரியாக இருக்கும் என்று ரசிகர்களால் கருதப்பட்டு வருகிறது.