இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தில் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு முன்னணி நடிகையாக மாறினார்.
இந்திய சினிமாவியும் தாண்டி பாலிவுட் அளவிற்குச் சென்று அங்கும் தொடர்களிலும் மற்றும் சில படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானார். பின்னர் அமெரிக்கா பாப் பாடகரும் மற்றும் நடிகருமான நிக் ஜோன்ஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விழாக்களில் விமர்சையாக பங்கேற்கும் நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா தற்போது நடந்துள்ள கோல்டன் க்ளோப் 2020 விருது வழங்கும் விழாவிற்கும் இருவரும் ஜோடியாகப் பங்கேற்றனர். விழாவிற்குக் கவர்ச்சியான உடையில் வந்துதிருந்தப் பிரியங்கா சோப்ரா தனது நிக் ஜோன்ஸ்க்கு முத்தும் கொடுத்துள்ளார். தற்போது இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.